கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் சேரன் முதல் முறை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த சேரன், அண்மையில் அளித்த பேட்டியின் மூலம் தனது சினிமா திரையுலக பயணத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் சேரன் தனது சினிமா வாழ்க்கையை வெறும் ஆபீஸ் பாய் கதாபாத்திரத்திலிருந்து தான் துவங்கினாராம்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் துணை இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை சேரனுக்கு வழங்கியுள்ளார். நாட்டாமை என்ற திரைப்படம் வரையிலுமே சேரனின் சம்பளம் ஒரு திரைப்படத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டும் தானாம். ஒரு துணை இயக்குனராக பணிபுரியும் அனுபவத்தில் தான், ‘கிரியேட்டர் என்பவரால் மட்டுமே ஒரு கலைஞரை (artist) உருவாக்க முடியும் என்ற உண்மையை தெரிந்து கொண்டாராம்.
ஏனென்றால் கிரியேட்டிவிட்டி (creativity) என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை துணை இயக்குனராக பணிபுரியும் அக்காலகட்டத்தில் தான் உணர்ந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்’ சேரன். மேலும் ‘இயக்குனர்’ என்கின்ற பதவியே திரை உலகத்தின் ‘ஆத்ம புருஷன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதவியின் மீது தனக்கு ஒரு மோகம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு இயக்குனர் நினைத்தால் மட்டுமே அந்த திரைப்படம் வெற்றி அடைய செய்ய முடியும், அவரின் முழு ஒத்துழைப்பு இல்லை எனில் அந்த திரைப்படம் தோல்வியை சந்திக்கும் என்று சேரன் தனது பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது உள்ள இளம் இயக்குனர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.
மூன்று அல்லது நான்காவது படத்தில் மூன்று கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்கு கிட்டத்தட்ட 4 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். இயக்குனர் அட்லி கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.