வெள்ளத்தில் சிங்கப்பெண்ணாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர்: இளைஞரை தோளில் சுமந்து செய்த தரமான செயல்
சென்னையில் மீட்பு பணியின் போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் சிங்கப்பெண்ணாக செயல்பட்டு நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சென்னை டிபி சத்திரம் பகுதியில் அமைந்துள்ள கல்லறை ஒன்றில் மரம் ஒன்று விழுந்ததுடன், வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துள்ளது.
உடனே சம்பவ இடத்திற்கு தனது உடன் பணிபுரியும் காவலர்களுடன் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சென்றுள்ளார்.
அப்பொழுது கல்லறையில் 3 நாட்களாக பணிபுரிந்த உதய் என்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து மழை நீரிலேயெ ஊறிக் கொண்டிருந்த நிலையில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி குறித்த இளைஞரை தனது தோளில் தூக்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இக்காட்சி சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகின்றது.