சென்னையில் மேலும் ஒரு பள்ளியில் வன்கொடுமை... 20 பள்ளி மாணவிகள் புகார்
சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மாணவிகளிடம் வன்கொடுமை அத்துமீறலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி, தனது 9444772222 செல்போன் எண்ணை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள் தனக்கு நேரிடையாக புகார் கூறலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து 15பள்ளி மாணவிகள் புகார் தெரிவித்துள்ள நிலையில், சென்னையிலிருந்து மட்டும் 7 மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு தனியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னையின் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமியில் படிக்கும் தடகள மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாரெழுந்துள்ளது.
பயிற்சியின் போது அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக மாணவிகள் கொதித்தெழுந்தாலும், பயத்தினால் யாரும் நேரடியாக புகாரளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட 20 மாணவிகளின் சார்பாக ஒருவர் மட்டும் புகார் எழுப்பி இருக்கிறார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.