லாட்டரி குலுக்கலில் அடிச்ச ஜாக்பாட் - சென்னை நபருக்கு கிடைத்த பணத்தொகை
லாட்டரி மூலம் நபர் ஒருவருக்கு கோடி கணக்கில் ஒரே இரவில் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. இது தொடர்பான விரிவான தகவலை பார்க்கலாம்.
லாட்டரி மூலம் அதிர்ஷ்டம்
நம்மில் எவ்வளவு பேர் லாட்டரியில் ஒரு அதிர்ஷ்டம் கிடைக்காதா என ஏங்கி இருப்போம். அது தற்போது பெரிய அளவில் ஒருவருக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தில் லாட்டரி விற்க முடியாது ஆனால் கேர்லாவில் விற்கப்படுகின்றது.
இது தவிர இன்னும் சில வளைகுடா நாடுகளில் விற்பனை செய்யபட்டு வருகின்றது. இவற்றில் நடக்கும் குலுக்கலில் மிகப்பெரிய பரிசுத் தொகை தமிழகத்தை சேர்ந்த நபருக்கு கிடைத்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இது ஊடகங்கள், சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கும் செய்தியாகும். அந்த வகையில் சென்னையை சேர்ந்த சரவணன் வெங்கடாசலம் என்ற நபருக்கு 60 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்திருக்ப்பது தற்போது முக்கியமான விடயமாக மாறியிருக்கிறது.
சென்னையை சேர்ந்தவர் சரவணன் வெங்கடாச்சலம் தற்போது இவருக்கு 44 வயது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவர் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
அங்கு மிகவும் பிரபலமான பிக் டிக்கெட் லாட்டரியை வாங்கியுள்ளார். இந்த டிக்கெட்டின் குலுக்கலில் பரிசு வெல்லும் அதிர்ஷ்ட எண் வாங்கிய நபர்களுக்கு டிராவை நடத்தும் ரிச்சர்டு மற்றும் பவுச்சரா ஆகியோர் நேரலையில் தொலைபேசியில் அழைத்து விவரத்தை சொல்வது வழக்கம்.

அந்த வகையில், பரிசு வென்ற சரவணன் வெங்கடாச்சலத்திற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் போன் செய்துள்ளனர். ஆனால், அவர் வேலையில் இருந்ததால் அந்த அழைப்பை எடுக்காமல் விட்டுள்ளார்.
வேலை முடிந்து செல்போனை எடுத்துப் பார்த்த சரவணன் வெங்கடாச்சலத்திற்கு செல்போனில் மிஸ்ட் கால்கள் குவிந்து கிடந்துள்ளன. இவர் இதை நம்பாமல் முன்பின் தெரியாத எண் என்பதால் மோசடி அழைப்புகளாக கூட இருக்கும் என திருப்பி போன் செய்யாமல் விட்டுவிட்டார்.
பின் குடும்பாத்தாரிடம் இருந்து போன் கால் வந்துள்ளது. இதன் மூலம் சரவணன் ராஃபிள் டிரா சீரிஸ் 280-ல் 25 மில்லியன் திர்ஹாம் பரிசு பெற்றுள்ளதாக தகவல் வந்ததை அவர்கள் எடுத்து கூறியுள்ளனர். இது இந்திய மதிப்பில் 60 கோடியாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |