12 நாட்கள் செஸ் போட்டியை விட்டு நகரமாட்டேன்.. அமைச்சர் மெய்யநாதனின் பரபரப்பு பேட்டி!
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், 186 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு முதல் வழியனுப்புவது வரை தமிழக அரசே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறது.
இதனிடையே, பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும்.

அடுத்த 12 நாட்களுக்கும் மாமல்லபுரத்தை விட்டு நகர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் அமைச்சர் மெய்யநாதன். இதில், அமைச்சர் மெய்யநாதனின் ஒவ்வொரு நடவடிக்கையும் முதலமைச்சர் ஸ்டாலினின் மனம் குளிரும்படியாக இருப்பது கவனிக்கத்தக்கது.
மேலும், செஸ் போட்டி நடைபெற்று வரும் இடத்தில் ஒரு சிறிய குறையோ புகாரோ கூட வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக உள்ளார்.
இது பற்றி அவர் தொடர்ந்து பேசியது குறிப்பிட்ட வீடியோ காணொளியின் மூலம் காணலாம்....