நடு வீட்டில் தாண்டவம் ஆடிய மாலினி.. பேசக்கூட முடியாமல் நின்ற கோபி - விறுவிறுப்பான தருணங்கள்!
நடுவில் வீட்டில் தாண்டவம் ஆடிய மாலினியை யாராலும் தடுக்க முடியாமல் பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவர் விட்டு சென்றாலும் குழந்தைகள் மற்றும் மாமி- மாமனாருக்காவும் மருமகள் என்னென்ன விடயங்களை செய்கிறார் என்பதனை கருத்தாக கொண்டு எடுக்கப்படுகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல் தான் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருக்கும் சீரியலாக பார்க்கப்படுகின்றது. தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலக் கோடி ரசிகர்களை கொண்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் வெளியான எபிசோட்டில் கோபியை போல் செழியனும் மனைவி விடயத்தில் தவறு செய்து விட்டார்.
தாண்டவம் ஆடிய மாலினி
இதனை தொடர்ந்து மாலினி புகைப்படம் மற்றும் வீடியோக்காட்சியை எடுத்து கொண்டு வீட்டிற்கே வந்து விட்டார்.
இந்த நிலையில் பாக்கியாவும் மாலினியை மிரட்டி அனுப்பி விடலாம் என நினைத்து வெளியே போகுமாறு கூறுகிறார்.
ஆனால் செழியன் வாழ்க்கை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாலினி வந்துள்ளார் போல் இருக்கின்றது.
ஜெனியிடம் நடந்த அனைத்து விடயத்தையும் கூறி விடுகிறார். இதனால் மனமுடைந்த ஜெனி குழந்தையுடன் அவரின் அம்மா வீட்டிற்கு செல்கிறார்.
இதனை தொடர்ந்து ஜெனியின் வீட்டிலுள்ளவர்கள் செழியனிடம் சண்டையிட கிழம்புகிறார்கள். தனிப்பட்ட பிரச்சினைகள் குடும்ப சண்டையாக உருவெடுத்து டிஆர்பியை எகிற வைக்க போகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |