முகத்தில் இருக்கும் பூனை முடிக்கு முடிவு கட்டனுமா? இத ட்ரை பண்ணுங்க
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள். சிலர் இதற்காக மொத்த சம்பளத்தையும் கூட வீணாக்கிவிடுகின்றார்கள்.
முக அழகிற்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது முகத்தில் காணப்படும் தேவையற்ற முடிகள் தான்.
மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியன, முகத்தில் முடிகள் அதிகமாக வளர காரணமாக அமைகின்றன. முகத்தில் ரோமங்கள் பெரிய பிரச்சனையாக இல்லாவிட்டாலும், முகத்தில் முடிகள் இருப்பது முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றது.
இந்த பிரச்சினைக்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு தீர்வு காணலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
முகத்தில் இருக்கும் முடிகளை நீக்க...
ஓட்ஸை அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பின்னர் அதை ஃபேஸ் பேக்காக உங்கள் முகத்தில் தடவ வேண்டும். 15 தொடக்கம் 20 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் ஸ்கரப் செய்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தில் காணப்படும் பூனை முடிகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
கஸ்தூரி மஞ்சள், சந்தனப் பொடி, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து இதனை ஃபேஸ் பேக்காக முகத்தில் தடவ வேண்டும். காய்ந்த பிறகு ஸ்க்ரப் செய்யவும். 20-30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தப்பட வேண்டும். இது முடி வளர்ச்சியைத் தடுக்க துணைப்புரியும்.
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் அரை டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். மென்மையான பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தில் இருக்கும் முடிகள் இலகுவில் உதிர்ந்துவிடும்.
இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும்.
காய்ந்ததும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்கிவிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |