மஷ்ரூம் மசாலா ஒரு முறை செப் தாமுவின் ரெசிபியில் செய்து பார்க்கலாமே!
மஷ்ரூமில் பல ரெசிபிகளை செய்ய முடியும். ஆனால் அதை வித்தியாசமாக செப் தாமு சொல்வதை போல இந்த பதிவில் செய்து பார்க்கலாம். களானில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.
இதை சுவையாக செய்வது மிகவும் பெரிய சவால். மரக்கறி உணவுப்பிரியருக்கு இந்த காளான் மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
- மஷ்ரூம் – அரை கிலோ
- 2 வெங்காயம்
- சின்ன துண்டு இஞ்சி
- 8 பூண்டு
- ஒரு கைபிடி அளவு கொத்தமல்லி
- 2 தக்காளி
- 1 ½ மிளகாய் பொடி
- 2 ஸ்பூன் மல்லிப் பொடி
- அரை ஸ்பூன் கரம் மசாலா
- அரை ஸ்பூன் சீரகப் பொடி
- உப்பு 5 ஸ்பூன்
- எண்ணெய் 2 ஸ்பூன்
- நெய்
செய்யும் முறை
முதலில் மஷ்ரூமை சிறியதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து வேக வைக்க வேண்டும். இந்த காளான் தண்ணீர் வீடும் அந்த தண்ணீர் ஆவி ஆகும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டை அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெங்காய விழுதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். உப்பு சேர்க்கவும்.
தொடர்ந்து மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளர வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் மஷ்ரூமை சேர்க்கவும். இப்படி செய்து எடுத்தால் வீடே மணமணக்கும் மஷ்ரூம் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |