Onion Samosa : வெங்காய சமோசா வீட்டில் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெங்காய சமோசா வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தைகள் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வரும் போது ஏதாவது திண்பண்டம் வைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.
அதிலும் சூடாக இருந்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சூடான வெங்காய சமோசா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 3 கப்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
வெங்காயம் - அரை கிலோ ((பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரம் ஒன்றில் மைதா உப்பு நெய் இவற்றினை போட்டு இதனுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சுமார் 30 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும். பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றினை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுள் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கி, பச்சை வாசனை சென்றதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கவும்.
இப்போது பிசைந்து வைத்த மாவை சின்ன சின்ன துண்டுகளாக்கி பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதுக்கி வைத்துள்ள மசாலாவை சிறிது அளவு வைத்து, சமோசா வடிவில் செய்து தனியாக எடுத்து தட்டியில் வைக்கவும்.
இவ்வாறு அனைத்து சமோசாக்களை செய்து முடித்த பின்பு ஒவ்வொன்றாக, பொரித்து எடுக்கவும். தற்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான சமோசா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |