புற்றுநோயை தடுக்கும் பச்சை பயறு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பச்சை பயறில் புரதச்சத்து அதிகமாக காணப்படுகின்றது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கின்றது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் பச்சை பயறு பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும். வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் காணப்படுகின்றது.
தினசரி உணவில் பச்சை பயறு சேர்த்துக் கொண்வதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். இவ்வவு மருத்துவ குணங்கள் நிறைந்த பந்சை பயறை கொண்டு எவ்வாறு பத்தே நிமிடத்தில் சுவையான குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முளைக்கட்டிய பச்சை பயறு/ பச்சை பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
பிரியாணி இலை - 1
கல்பாசி - 1 துண்டு
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
தக்காளி - 2 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/4
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து தட்டிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம், பிரியாணி இலை, கல்பாசி ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த தக்காளியை சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் மஞ்சள் தூள், மல்லித் தூள், குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி, மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரையில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பின்னர் பச்சை பயறு அல்லது முளைக்கட்டிய பச்சை பயறை சேர்த்து நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கிய நிறைந்த சுவையாக பச்சை பயறு குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |