இந்தியாவில் அறிமுகமாகும் ChatGPT Go.. மாதக்கட்டணம் எவ்வளவு தெரியுமா?
ChatGPT Go எனப்படும் OpenAI சப்ஸ்கிரிப்ஷன் பிளான் இந்தியாவில் அறிகமுகப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஓபன்ஏஐ நிறுவனம் புதிய ChatGPT Go என்ற திட்டத்தை அறிமுகமாக்கியுள்ளது.
இந்த புதிய திட்டமான இதுவரையில் இல்லாத வகையில், மலிவான விலையில் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கிறது.
ChatGPT மாதக்கட்டணம் ரூ.1,999 ஆக உள்ள நிலையில், இந்த புதிய திட்டத்தின் மாதக்கட்டணம் ரூ.399 ஆக அறிமுகமாகியுள்ளது. இந்த கட்டணம் வழக்கமாக நாம் பயன்படுத்தும் ChatGPT Plus திட்டத்தை விட மிக குறைவாக உள்ளது.
இது போன்று ChatGPT Go திட்டத்தினால் என்னென்ன பலன்களை அனுபவிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பலன்கள்
1. UPI கட்டணங்களுக்கான சப்போர்ட்டுடன் அறிமுகமாகியுள்ள ChatGPT Go-ஐ ஓபன்ஏஐ நிறுவனம் வழங்கி வருகிறது. இதனால் மில்லியன் கணக்கான ஸ்மார்ட்ஃபோன் யூஸர்கள் தங்கள் டிவைஸ்களில் புதிய GPT 5 AI மாடல் மற்றும் பிற பிரீமியம் அம்சங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
2. GPT 5-க்கான அணுகல் கிடைக்கும்.
3. எக்ஸ்பேன்டட் மெசேஜிங்/சேட்ஸ் மற்றும் அப்லோட்ஸ்
4. எக்ஸ்பேன்டட் மற்றும் ஃபாஸ்ட் இமேஜ் ஜெனரேஷன் லிமிட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. நீண்ட மெமரி (Longer memory)
6. லிமிட் செய்யப்பட்ட டீப் ரிசர்ச் அக்சஸ்
7. ப்ராஜக்ட்ஸ், டாஸ்க்ஸ், கஸ்டம் GPT-க்கள்
ChatGPT Go-வில் Signup செய்வது எப்படி?
முதலில் உங்களுடைய வெப் அல்லது மொபைலில் ChatGPT-ஐ Open செய்யவும்.
அதன் பின்னர், நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் E-mail ID-ஐ login செய்து கொள்ளவும்.
Upgrade to Go பேனரை கிளிக் செய்து, Try Go என இருக்கும் அதனை அழுத்தி உள்ளே செல்லவும்.
ChatGPT திட்டத்திற்கான UPI கட்டணம் செலுத்துமாறு கேட்கும், அதனை உங்களின் ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
அந்த கணக்கை பயன்படுத்தி நீங்கள் ChatGPT Go-ஐ பயன்படுத்தலாம்.
ChatGPT Go-க்கு வருடாந்த திட்டம் உள்ளதா?
கிரெடிட் கார்டு அல்லது UPI கட்டண முறைகளை பயன்படுத்தி ChatGPT Go சப்ஸ்கிரிப்ஷனைப் பெற்றுக் கொள்வதுடன் OpenAI போன்று இந்த திட்டமும் மாதக்கட்டணங்களை தான் வழங்குகிறது. இது காலப்போக்கில் மாற்றங்களுக்கு உள்ளாக்கலாம்.
ChatGPT Go திட்டத்துடன் வேறு அம்சங்களை பயன்படுத்தலாமா?
ChatGPT 4o போன்ற மரபு மாதிரிகள் ChatGPT Go சப்ஸ்கிரிப்ஷன்களுடன் சேர்க்கப்படவில்லை என OpenAI கூறுகிறது. அதே போன்று ரூ.399 ChatGPT திட்டம் Sora AI வீடியோ உருவாக்க கருவி அல்லது Codex Agent போன் அம்சத்திற்கான அணுகலை பெற முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |