Chatgptயிடம் டயட் பிளான் கேட்ட நபருக்கு நேர்ந்த கதி- மருத்துவர் எச்சரிக்கை!
chatgpt யிடம் டயட் பிளான் கேட்ட நபருக்கு நேர்ந்த கதி, இணையவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது.
ChatGpt- ஆல் வந்த வினை
அமெரிக்காவை சேர்ந்த 60 வயது நபருக்கு எந்த வித நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளார்.
இவர், chatgpt யிடம் தனக்கான உணவுத் திட்டத்தையும் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு போன்றவை வராமல் இருக்க என்ன செய்ய செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதன் பின்னர், ChatGpt கொடுத்த டயட் பிளானை கடந்த சில மாதங்களாக பின்பற்றியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் காரணமாக தற்போது மருத்துவமனையில் அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
AI டயட் பிளான்
இந்த நிலையில், அவர் கேட்ட கேள்விக்கு, “ ஓ... அப்படி என்றால் உப்புதான் நம் உடலுக்கு எல்லாவித பிரச்சனைக்கும் காரணம்” என நம்பி அவர் முழுமையாக உப்பு எடுத்து கொள்ளாமல் உணவு சாப்பிட்டு வந்துள்ளார்.
தண்ணீரில் கூட உப்பு உள்ளது என்பதனால் வீட்டில் தண்ணீரில் இருந்து கூட உப்பை பிரித்தெடுக்கும் கருவியை பயன்படுத்தி தண்ணீர் குடித்து வந்துள்ளார்.
உப்பு எடுத்து கொள்ளாமல் இருந்ததால் குறித்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கும் மருத்துவர்
நல்ல உடல்நிலை மற்றும் மனநிலை ஆரோக்கியத்துடன் இருந்த நபருக்கு மனநலம் முதல் உடல் உறுப்புகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மருத்துவர், “ குறித்த நபர் உப்பு திடீரென்று எடுத்துக் கொள்ளாமல் விட்டதால் அவரின் உடலில் சோடியத்தின் அளவு குறைந்துள்ளது. இதனால் அவருடைய தசைகள் இயங்குவதற்கு தேவையான செயல்பாடுகள், மூளையின் இயக்கத்திற்கு தேவையான செயல்பாடுகள் போன்றவை குறைந்து சோர்வடைந்துள்ளது.
மேலும், என்னதான் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் சில மருத்துவ ஆலோசனைகள் நடைமுறையில், நபருக்கு நபர் வேறுப்படும். எத்தகைய மருத்துவ ஆலோசனைகளாக இருந்தாலும் அதற்கான தேர்ச்சி பெற்ற மருத்துவர் அணுகி ஆலோசனை பெற்ற பின்னர் பின்பற்ற வேண்டும்.” என எச்சரித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தற்போது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வேலைகளை செய்து வருகிறார்கள். அப்படியானவர்கள் இந்த சம்பவம் பெரும் இடியாக இறங்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |