மன்னரின் முடி சூட்டு விழாவில் உலாவிய மர்ம உருவம்: ராணியின் ஆத்மாவாக இருக்குமா?
இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடுசூட்டிக்கொண்ட போது அரண்மனைக்குள் மர்மமான ஒரு உருவம் உலாவிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
முடி சூட்டும் விழா
இங்கிலாந்தை 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் தான் 2ஆம் எலிசபெத் மகாராணி. மகாராணி கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அவரின் மறைவிற்குப் பின்னர் 2ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக இருந்து வந்தார்.
இவர் முடி சூடிக்கொள்ளாமலேயே அரியணையில் ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு உத்தியோகப்பூர்வமாக முடி சூட்டும் வைபவம் நடைபெற வேண்டும் என்று முடி வெடுத்து மே மாதம் 6ஆம் திகதி நடத்தி வைக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தனர்.
அறிவித்ததன் படி மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை 3ஆம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வானது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு 2000 விருந்தினர்களும், உலகத் தலைவர்களும் இணைந்துக் கொண்டிருந்தனர்.
முடி சூட்டு விழாவிற்கு டூனிக்கா எனப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடையைத் தான் அணிந்திருந்தார் 3 ஆம் சார்லஸ். இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடுசூட்டிக்கொண்ட நிலையில் லண்டன் நகரமே திருவிழாப் போல களைக்கட்டியிருந்தது.
மர்ம உருவம்
இந்த காலத்திலும் ஆத்மா, பேய், பிசாசு என்று எல்லாம் சொன்னால் நம்பும் அளவில் யாருக்கும் இருக்க மாட்டார்கள். ஆனால் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைத்து வந்து அரியணையில் அமரும் வேளையில் அரண்மனைக்குள் ஒரு விநோதமான கருப்பு உருவம் உலாவியதாக கூறப்படுகிறது.
இந்த உருவம் கையில் எதையோ ஏந்திக் கொண்டு அங்கும் இங்கும் உலாவும் இந்தக் காட்சி அனைவரையும் பயமுறுத்தும் அளவில் இருக்கிறது.
மேலும், இந்த மர்ம உருவம் ஒருவேளை மறைந்த மகாராணியாக கூட இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.