கெட்ட கொழுப்பை அடியோடு விரட்ட வேண்டுமா? வாழ்க்கையில் இந்த மாற்றங்களை செய்ங்க
ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன.
அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை HDL கொழுப்பு என்று கூறப்படுகின்றது.
தேவைப்படாத கொழுப்புகளான LDL கொழுப்புகள் ரத்த குழாயில் படியும் செயற்பாடு கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும். உடலில் கெட்ட கொழுப்பு இருந்தால் இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதற்கு ஏற்ப உணவு பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இதற்கு நாம் அன்றாட வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
கட்டுப்படுத்தும் வழிகள்
நாம் தினமும் காலையில் உணவு உண்ணும் போது உணவில், அதிக எண்ணெய் இல்லாத, நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக நாம் காலை உணவாக ஓட்ஸ் அல்லது கஞ்சி சாப்பிடலாம்.
இவற்றில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இதனால் நமது உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் கொலஸ்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.தினம் சாப்பிடும் உணவில் ப்ரோக்கோலி எடுத்துக்கொள்வது நன்மை தரும் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் காணப்படுகின்றது.
இது கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படும். இதை தவிர ப்ரோக்கோலியில் சல்ஃபோராபேன் என்ற கலவை உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகின்றது.
உணவில் அதிகமாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.கரையக்கூடிய நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைக் குறைக்கிறது. இதற்கு ஓட்ஸ், காராமணி, ஆப்பிள், பேரிக்காய் போன்ற உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நமது அன்றாட உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.இந்த உணவுகள் இதய ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும்.இதற்கு நாம் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதை போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இதனால் கெட்ட கொழுப்பு நீங்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. பச்சை காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் முக்கியம். நாம் எவ்வளவு பச்சை காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நன்மை தருகிறது.
எனவே பீன்ஸ், வெண்டைக்காய், கீரை போன்ற காய்கறிகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகவே காய்களில் ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து உள்ளது.
இவை கெட்ட கொழுப்பை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் உணவில் எடுத்துக்கொள்ளும் வெள்ளை அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட கோதுமை ஆகியவற்றுக்கு பதிலாக ஆரோக்கியமான உணவு வகையாக பார்லி, ராகி, சாமை, சோளம், ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
இவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். இரத்த சர்க்கரை அளவும் இவற்றினால் கட்டுக்குள் இருக்கும்.இதை தவிர கொலஸ்ரால் அதிகம் என்று தெரிய வரும் கட்டத்தில் எந்த வேலை இருந்தாலும் அதை விட உடற்பயிற்சி செய்யவது முக்கியம்.உடல் செயல்பாடற்ற தன்மை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.
ஆகையால் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகாசனம் என ஏதாவது ஒரு விதமான உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது அவசியம். இரவில் தாமதமாக சாப்பிடுவது இன்றைய சமுதாயத்தில் பழக்கப்படுத்திவிட்டனர்.
இரவு உணவு எடுத்துக்கொள்ளும் போது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எடையையும் குறைக்க உதவும். உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, இரவு உணவில், லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உட்கொண்டால் இன்னும் நன்மை தரும்.
உணவில் அதிகளவான சர்க்கரை மற்றும் உப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் உணவில் உப்பு மற்றும் சர்க்கரையை மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |