எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரெஷ்ஷை மாற்ற வேண்டும்?
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கும் காலாவதியாகும் தேதி கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது தயாரிப்பு தேதியிலிருந்து குறிப்பிட்ட மாதம், வருடத்தை வைத்து இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இவை நாம் சாப்பிடும் பொருட்களில் ஆரம்பித்து நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பொருட்கள் வரை உள்ளது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இதில் ஒன்று தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஷ். இதனை எப்படி வாங்க வேண்டும் எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
முந்தைய காலத்தில் வேப்பம் குச்சி, ஆல மரக்குச்சி இவற்றினை பயன்படுத்திய தற்போது நாகரீகம் என்ற பெயரில் பிளாஸ்டிக்கில் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம்.
டூத் பிரஷை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ் சேதம் ஆகும் வரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்தது 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில பிரஷ்களை நீண்ட நாள் வைத்து பயன்படுத்தினால் சரியாக சுத்தம் செய்யாது. பாக்டீரியாக்கள் வளர்ந்து பிரச்சினையை ஏற்படுத்துமாம்.
குறைந்த விலையில் கிடைக்கும் டூத் பிரஷை வாங்கி சிரமப்படாமல், தரமானதா என்பதை தெரிந்து கொண்டு வாங்கவும்.
டூத் பிரஷில் இருக்கும் முட்கள் போன்ற பகுதி கடினமாக இல்லாமல் மென்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் கடினமாக இருந்தால் ஈறுகளில் ரத்தப் போக்கு மற்றும் அதிக வலியை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |