சந்திரயான் 3 தரையிறங்கிய தருணம்... உலகமே காத்திருந்த நொடி இதோ! Live
இந்தியா தன் முயற்சியில் ஜுலை 14ஆம் திகதி மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது. இந்நிலையில் தான் தற்போது சந்திராயன் 3 நிலவிற்கு ஏவி வெற்றிகரமாக நிலவின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தது.
சந்திராயன் - 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏறத்தாழ சுமார் 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு நாளை (ஆகஸ்ட் 23ஆம் திகதி) மாலை 6.04 மணிக்கு சந்திரயான் - 3 விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது.
தரையிறங்கிய பின் நடப்பது என்ன?
இந்நிலையில் லேண்டர் இன்று 6.04 மனிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இவ்வாறு தரையிறங்கும் இறுதிகட்ட செயற்பாடுகள் மிகப் பெரும் சவாலாகத் தான் இருக்கிறது.
முன்னதாகவே சந்திராயன் 2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் கருவி தற்போதைய லேண்டர் கருவியுடன் தொடர்புப் ஏற்படுத்திக் கொண்டது. இதனால் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள சாதமாக அமைந்திருக்கிறது.
இன்றைய தினம் நிலவுக்கு மேல் 30 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் இருக்கும் போது நிலவில் தரையிறங்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கும் அப்போது லேண்டர் வினாடிக்கு 1.68 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
அந்த சமயத்தில் நிலவின் ஈர்ப்பு விசையின் முக்கியப் பங்கு என்பதால் லேண்டரின் வேகத்தை கண்காணிப்பது மிக அவசியமாகும். நிலவை நெருங்கும் லேண்டர் கடைசி ஏழு நிமிடங்கள் மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சிக்காக உலகமே பல கேள்விகளுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |