எப்போவோ அது எல்லாம் முடிஞ்சி - விஜய்,சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் தந்தை
விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு குறித்து தற்போது விஜய்யின் அப்பா விளக்கமளித்துள்ளார்.

விஜய் சங்கீதா விவாகரத்து
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சை தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த விவாகரத்து வழக்கானது ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு ஒரு முடிவாக இந்த விவாகரத்து செங்கல்பட்டு குடும்பநல கோர்டில் விஜய் மனைவி சங்கீதாவால் மனு தாக்கல் செய்யபட்டது.

சமீபத்தில் கூட சங்கீதா ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போட்டு மனு தாக்கல் செய்திருந்தார் என்று சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த விவாகரத்து சர்ச்சை குறித்து முதன் முறையாக பேசி உள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
தனியார் யூடியூப் சேனலுக்கு விஜய்யின் தந்தை ஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில் அவர் பேசும் போது "விஜய் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்திற்கு எதிரானவர், பெற்றோருக்கு எதிரானவர் என அவரின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை செய்கின்றனர் சிலர்.
அது அவர்களுக்கு கைவந்த கலை. அது தான் பெர்சனல் அட்டாக் எப்போதோ நடந்து, எப்போதோ இருவருக்குள்ளும் சமரசமாகி கையெழுத்தான விஷயத்தை இப்போது கொண்டுவர வைத்துள்ளார்கள்.

மற்றவர்களின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை செய்வதில் அவர்கள் பிஹெச்டி முடித்தவர்கள்.
முடிந்த ஒரு விஷயம் வெளியே வருகிறது என்றால், இந்த நேரத்தில் வெளிவருகிறது என்றால் அதற்கு எதிர்கட்சிகளை தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும்." என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |