செப்டம்பர் 18 சந்திர கிரகணம்- அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் 18, 2024 அன்று சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
இது தொடர்பான நாசாவின் கூற்றுப்படி , வரப் போகும் சந்திர கிரகணம் ஐரோப்பாவில் அதிகாலையிலும், அமெரிக்காவில் மாலையிலும் நிகழும்.
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக், பசிபிக், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உள்பட பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரணத்தை பார்க்க முடியும்.
அதே சமயம் இந்தியாவில் இருக்கும் மக்களால் இந்த கிரணத்தை பார்க்க முடியாது. ஆனால் இதனால் வரும் பலன்களை அனுபவிப்பார்கள்.
இந்த சந்திர கிரகணம் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும் என ஜோதிடம் சொல்கிறது.
மேலும் அதில், “ பித்ரு பக்ஷத்தில் சந்திர கிரகணம் தற்செயலாக குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரப் போகிறது. இதனால் அநேகமான நஷ்டங்கள் ஏற்படலாம்.
அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மேஷம்
- மேஷ ராசியில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பார்கள்.
- இவர்களில் அதிக செலவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
- பணப்பிரச்சினை வரும் போது சேமிப்பு இருப்பவர்கள் தப்பிக் கொள்வார்கள்.
- கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
- மன அழுத்தம் மற்றும் எரிச்சல் வெளிப்படும்
- சிலருக்கு இது கஷ்ட காலமாக இருக்கலாம்
2. சிம்மம்
- சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நிதி விஷயங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
- தொழிலில் பல்வேறுப்பட்ட சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.
- வியாபாரத்தில் நஷ்டம் வரும்.
- யாருக்கும் தீமை செய்யாதே.
- முடிந்த அளவு நம்மை சார்ந்து வாழ்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
- குறிப்பாக எழுத்துப்பூர்வமான ஆவணங்களை கவனமாக வைத்து கொள்ள வேண்டும்.
- எப்போதும் உங்களின் உடல் நலன்களில் கவனமாக இருக்க வேண்டும்.
- மற்ற ராசிகளை விட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சவாலாக இருக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இது கிரணம் முடிந்தவுடன் சரியாகி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).