Chanakya: தவறியும் இத செய்யாதீங்க.. வாழ்க்கையே தலைகீழாக மாறும்!
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர்களில் இராஜதந்திரியாக இருந்தவர் தான் சாணக்கியர்.
இவரின் கொள்ளைகள் எப்போதும் மனித வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாக இருக்கும்.
இந்த கொள்கைகளை தொகுத்து சாணக்கிய நீதி என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அந்த நூலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்களை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதனாக பிறந்த ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான மதம், தர்மம், கர்மம், பாவம் மற்றும் புண்ணியங்கள் என்பவற்றை அவர் மொழி நடையில் கூறியுள்ளார்.
அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்போம். அதற்கான வழியை சாணக்கியர் ஆயத்தப்படுத்தப்படுத்தி கொடுத்துள்ளார்.
சாணக்கிய கொள்கைப்படி, ஆண்கள் செய்யும் சில தவறுகள் அவர்களை வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடும் எனக் கூறப்படுகிறது. அப்படியாயின் வாழ்க்கையை மாற்றும் தவறுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. பெண்களை அவமதித்தல்.
சாணக்கியர் நீதி சாஸ்திரத்தின் படி பெண்களை அவமதிக்கும் ஆண்கள் வாழ்க்கை நல்ல நிலைக்கு வரமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பெண்களை தவறாக நடத்துவது, அவமதிப்பது போன்ற செயல்கள் ஆண்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருக்கும். சிலர் பெண்களை இகழ்வது, கேலி செய்வது அல்லது அநீதி இழைப்பது போன்ற செயல்களை விரும்பி செய்வார்கள். இது அவர்களுடைய தோல்விக்கு வழிவகுக்கும். பெண்களை அவமதிக்கும் ஆண்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கை அமைதியற்றதாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
2. கோபம் மற்றும் அகங்காரத்தில் முடிவு எடுத்தல்.
சில ஆண்கள் கோபத்திலும் ஆண்கள் என்கிற அகங்காரத்திலும் சில முடிவுகளை எடுப்பார்கள். அப்படியானவர்கள் எந்த வழியிலும் முன்னேறமாட்டார்கள் என சாணக்கியர் கூறுகிறார். கோபம் உணர்வு ஒருவரது அறிவை மழுங்கடித்து சரியான முடிவெடுக்கும் திறனை பாதித்து விடும். அதே சமயம் மற்றவர்கள் கூறவதை துளியும் ஏற்காது முடிவு எடுத்தால் அந்த காரியம் சில சமயங்களில் தோல்வியடையலாம். உறவுகளில் கோபம், பொய் இருந்தால் காலப்போக்கில் அந்த உறவில் விரிசல் விழ ஆரம்பித்து விடும்.
3. வீண் செலவு செய்தல்.
பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை புத்திசாலித்தனமாக செலவழிப்பதும், நிர்வகிப்பதும் அவசியம் என சாணக்கியர் கூறுகிறார். எவ்வளவு பணம் சம்பாரித்தாலும் சிலருக்கு அதனை சரியான வழியில் செலவு செய்ய தெரியாமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை மற்றும் நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. அவசர கால நிதியை உருவாக்குவது, சேமிப்பு, முறையான திட்டமிடல், முதலீடு ஆகிய நிதி ஒழுக்கங்கள் ஒருவரை வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வைத்திருக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |