புகுந்த வீட்டிற்கு சாபத்தை ஏற்படுத்தும் பெண்களின் குணங்கள்- உங்க வீட்டு மருமகளிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார். இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியர் கூற்றின் படி பெண்கள் வீட்டின் லட்சுமியாக பார்க்கப்படுகிறார்கள். பெண்ணால் ஒரு வீட்டை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்ற முடியும்.
எனவே ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்யும் போது சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
அந்த வகையில் வீட்டை நரகமாக்கும் பெண்களிடம் இருக்கும் மோசமான குணங்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
துணையுடன் மகிழ்ச்சியாக இருந்தாலும் சந்தேகத்துடன் இருக்கும் ராசியினர் இவர்கள் தான் உங்க ராசி இருக்கா?
1. கெட்ட குணமுள்ள, ஒழுக்கக்கேடான மற்றும் முரட்டுத்தனமான பெண்களை ஒருபோதும் திருமணம் செய்யக் கூடாது. இவர்கள் வீட்டிற்கே சாபம் போன்றவர்கள் என சாணக்கியர் கூறுகிறார். இப்படியான பெண்களை திருமணம் செய்தால் வீட்டிற்கு அவமானம் வந்து சேரும்.
2. விருந்தினரை வரவேற்காத, பெரியவர்களை மதிக்காத பெண்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக் கூடாது. அத்தகைய பெண்கள் குடும்பத்திற்கும் துணைக்கும் அவமானத்தை ஏற்படுத்துவார்கள்.
3. கல்வி, நிதி மேலாண்மை மற்றும் நெறிமுறைகள் வாழ்க்கைக்கு மிக அவசியமாகும். அளவிற்கு அதிகமாக பணத்தை செலவு செய்யும் பெண்கள் வீட்டிற்கு கெட்டதை தேடி வைப்பார்கள். அத்துடன் தாயாக இருக்கும் பெண்கள் முதலில் தங்களின் குழந்தைகளை மதித்து நடக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் குடும்பம் சிதையை ஆரம்பிக்கும்.
4. தீய எண்ணங்கள் மற்றும் பேராசை கொண்ட பெண்களை எப்போதும் தங்களுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்ணுடன் இருப்பது பெரிய சிக்கல்களை உங்களிடம் கொண்டு வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |