ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்: இந்தியாவுடன் இணைந்து கொண்டாடப் போகும் ஏனைய நாடுகள் என்னென்ன தெரியுமா?
பல வருட போராட்டத்திற்கு பின்னர் கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரிட்டிஷ்காரரிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.
இதனை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா மக்கள் சுதந்திர தினம் கொண்டாடி வருகின்றனர்.
மாறாக இந்த வருடம் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று உலகிலுள்ள பல நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது.
அப்படி சுதந்திர தினம் கொண்டாடும் ஏனைய நாடுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள்
1. காங்கோ பிராசா என அழைக்கப்படும் காங்கோ குடியரசு, பிரான்சிலிடமிருந்து கடந்த 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சுதந்திரம் பெற்றுக் கொண்டது. இந்த நாடு இந்தியாவுடன் இணைந்து சுதந்திரம் தினம் கொண்டாடவுள்ளது.
2. லிச்சென்ஸ்டீன் நாடும் சுதந்திர தினம் கொண்டாடவுள்ளது. இந்த நாடு ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய நாடாகும். லிச்சென்ஸ்டீன் ஜெர்மனிய ஆட்சியில் இருந்து கடந்த 1866 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. இருந்த போதிலும் கடந்த 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 வரை சுதந்திர தினம் அறிவிக்காமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
3. பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய தீவு நாடு தான் பஹ்ரைன். இந்த நாடு கடந்த 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இருப்பினும் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 16 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |