உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் 4 மனிதர்கள்.. இவங்ககிட்ட ஜாக்கிரதை-சாணக்கிய நீதி
இந்தியாவின் பண்டைய காலத்தில் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் இருந்தன. இதனைவே அறிவுரைகளின் தொகுப்பாக்கப்பட்டு இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், ஒரு நபரின் நல்வாழ்விற்கு அச்சுறுத்தல்களையும், ஆபத்துக்களையும் கொண்டு வரும் நபர்கள் பற்றி சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது.
அதில் அப்படி என்னென்ன விடயங்களை கூறியுள்ளார் என்பதனை தொடர்ந்து பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாணக்கியர் தரும் ஆலோசணை
1. சாணக்கியர் கூற்றின் படி, நெருப்பு, தண்ணீர் இவை இரண்டிலும் கவனக்குறைவுடன் இருக்கக் கூடாது. இவற்றை சரியாக கையாள தவறும் பட்சத்தில் வாழ்க்கையிலே பிரச்சினை வரும். எனவே இவை இரண்டையும் சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் கடுமையான காயம் அல்லது மரணத்திற்குக் கூட இவை வழிவகுக்கலாம்.
2. ஆபத்தான விலங்குகளிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற விலங்குகளின் சுபாவம் ஆக்ரோஷமாகவும் ஆபத்தாகவும் இருக்கும். இந்த குணம் கொண்டவர்களிடம் பழகும் பொழுது சரியான சந்தர்ப்பம் வந்தால் அவர்களின் பசிக்கு நாம் இரையாகலாம். ஆகவே ஆபத்தான விலங்கு போல் குணம் கொண்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
3. கெட்ட சகவாசம் கொண்டவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆயுதங்களை வைத்திருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கின்றோமோ அதே போல் இவர்களிடமும் நடந்து கொள்வது நல்லது. இவர்கள் தவறான பாதையில் செல்வது மட்டுமல்லாது நம்மையும் தவறான பாதையில் கொண்டு செல்வார்கள். இந்த குணம் கொண்டவர்கள் கோபத்தில் உங்களைத் தாக்கி ஆபத்தை ஏற்படுத்தலாம்.
4. சோம்பேறிகளிடம் பழகுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் நம்மையும் செய்ய விட மாட்டார்கள். இவர்களை வாழ்க்கையில் வைத்து கொண்டால் முன்னேறுவது கடினம். அவர்களுடன் பழகும் போது காலப்போக்கில் நீங்களும் அவர்கள் போல் மாற வாய்ப்பு இருக்கிறது. இதன் விளைவாக உங்களின் இலக்கு உங்களுக்கே மறந்து போகலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |