இந்த பழக்கங்கள் இருந்தால் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர்!
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவரின் கொள்கைகளை தொகுத்து உருவாக்கப்பட்டதே சாணக்கிய நீதியாகும். இவர் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது.
இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நாம் வாழ்க்கையை எப்போதும் வறுமையில் இருந்து மீளவிடாத பழகக்கங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வறுமைக்கு வித்திடும் பழக்கங்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒருவர் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், இவருக்கு பணத்தின் கடவுளாக கருதப்படும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் சுத்தமாக கிடைக்காது என்கின்றார்.
மேலும் சுகாதாரமின்றி இருப்பது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டே இருக்கும். அதனால் சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் மருத்துவ செலவுக்காக வீணடிக்க வேண்டியதாக இருக்கும்.
சாணக்கியரின் குறிப்பிடுகையில் யார் உடலை சுத்தமாக வைத்திருப்பதோடு, பற்களையும் துணிகளையும் சுத்தமாக வைத்திருக்கின்றார்களோ அவர்களிடம் தான் செல்வம் தேடிவரும்.
தூய்மையில்லாதவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் அளவுக்கு அதிகமாக தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருந்து மீளமுடியாமல் சிக்கிக்கொள்வார்கள். காலையில் தாமதமாக எழுபவர்களுக்கு நாள் மிகவும் குறுகியதாகவே கிடைக்கும்.
இவர்கள் வெற்றிக்கான முயற்சிகளை செய்வதில் தினசரி பாதிப்பை எதிர்நோக்குவார்கள். இது தொடரும் போது வாழ்க்ககையே வீணாகிவிடுகின்றது. இவர்கள் வறுமையில் இருந்து ஒருபோதும் வெளிவரவே முடியாது.
மேலும் அளவிற்கு அதிகமாக தூங்கும் பழக்கம் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணமாக அமைகின்றது. காலையில் சீக்கிரம் எழுவதால் வாழ்வில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் அதர்மம், தந்திரம் மற்றும் நேர்மையின்மை போன்ற ஒழுக்கமற்ற வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் விரைவில் பணம் சம்பாதித்தாலும், அப்படி வரும் பணத்தால் பெரிய ஆபத்துகளை சந்தித்து மீண்டும் மீளவே முடியாத வறுமைக்கு தள்ளப்படுவார்கள்.
வார்த்தையில் தூய்மையின்றி அசிங்கமான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள் லட்சுமி தேவியின் வெறுப்புக்கு ஆளாகின்றார்கள். இந்த குணம் கொண்டவர்கள் வாழ்க்கை வறுமையிலேயே தான் இருக்கும் என சாணக்கியரை் எச்சரிக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |