சொர்க்க வாசலை திறந்தே வைக்கும் குணங்கள்- சாணக்கிய நிதியில் திரட்டப்பட்ட தகவல்
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
ஒருவர் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க வாழும் நாட்களில் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
அந்த வகையில், ஒருவர் இறந்த பின்னர் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா?
1. வாழ்க்கையில் பொறுப்புகளை நிறைவேற்ற பணம் அவசியம். ஆகையால் நீங்கள் இறந்த பின்னும் உங்கள் சந்ததியினருக்கு பணத்தை சேமித்து வைத்து விட்டு செல்ல வேண்டும். சிலர் தேவையற்ற செலவுகள் இல்லாமல் பணத்தைச் சேமிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். குவிக்கும் செல்வம் இறந்த பிறகு உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
2. ஒருவர் சோம்பலைக் கைவிட்டு கடமைகளை சரி வர செய்ய வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். இளமையில் கடினமாக உழைத்தால் முதுமையை மகிழ்ச்சியாக வாழலாம்.
3. மற்றவர்களிடம் ஒருவர் நடந்து கொள்ளும் அவர் வாழ்க்கையில் பெரிதாக தாக்கம் செலுத்துகின்றது. உங்களின் அடக்கமான பேச்சு, நடத்தை, நிதானம் இவை தான் வாழும் போது சொர்க்கத்தை உங்களுக்கு தரும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ பலர் முன்வருகிறார்கள். இறந்த பிறகும் அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவும், நற்பெயரும் இருக்கும்.
4 சாணக்கியர் கருணை மற்றும் இரக்கத்தின் சக்தி நம்புவதாக கூறுகிறார். ஒருவரின் இறந்த பிறகு, நீங்கள் செய்த புண்ணிய செயல்களின் பலனை உங்கள் குடும்பமும் பெறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |