chanakya niti: ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையிடம் இருக்கும் 5 குணங்கள்- உங்க குழந்தையிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றின் படி, குழந்தைகளியிடம் இருக்கும் சில குணங்கள் அவர்களின் குடும்பத்தை பெருமையடையச் செய்யும் என்கிறார்.
அந்த வகையில் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையிடம் அப்படி என்னென்ன குணங்கள் இருக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1.ஒழுக்கம்
குழந்தைகளிடம் சில நல்ல குணங்கள் இருக்க வேண்டும். அதில் ஒன்று தான் ஒழுக்கம். குழந்தைகளிடம் ஒழுக்கம் சரியாக இருந்தால் அந்த குடும்பம் சொர்க்கமாக இருக்கும். அதே சமயம் குழந்தைகளிடம் கெட்ட குணங்கள் இருந்தால் வீட்டின் நிம்மதி பறிப்போய் விடும். பெற்றோர்கள் அணைவருக்கும் தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக தான் தெரிவார்கள்.
இது நிஜ வாழ்க்கையிலும் இருந்து விட்டால் அவர்கள் நிஜ சொர்க்கத்தில் வாழ்வார்கள். குழந்தைகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் பெற்றோர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக இருப்பது மிகவும் முக்கியம் என சாணக்கியர் கூறுகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருந்து விட்டால் குழந்தைகளிடம் நல்ல பண்புகள் இருக்கும் சமூகத்திலும் மரியாதையுடன் இருக்கலாம்.
2. கீழ்ப்படிதல்
குழந்தைகள் கீழ்ப்படிவுடன் நடந்து கொண்டால் அது அவர்களுக்கு மட்டுமல்ல முழு குடும்பத்திற்கும் பெருமையை சேர்க்கும் என சாணக்கியர் கூறுகிறார். கீழ்ப்படிதலுள்ள மற்றும் பண்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
3. மற்றவர்களை மதிக்கும் குழந்தைகள்
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் இவர்களை குழந்தைகள் எப்போதும் மதிக்க வேண்டும். அத்துடன் குழந்தைகளாக இருக்கும் போதே நல்லது கெட்டது என்ற வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.இப்படி ஒரு குழந்தை சிறுவயதிலேயே இருக்குமாயின் அந்த குடும்பம் மகிமை கொண்டதாக திகழும். இவர்கள் சமூகத்திலும் மதிக்கப்படுவார்கள்.
4. அறிவை அடையும் குழந்தைகள்
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கல்வி இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அறிவைப் பெறுவதில் எப்போதும் குழந்தைகள் சிறந்த விளங்க வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் அவர்களின் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி மற்றும் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியின் அருள் எப்போதும் இருக்கும்.
5. பெரியவர்களின் ஆலோசனைகளை மதிப்பவர்கள்
பெற்றோர் சொல்வதைக் கேட்கும் ஒரு குழந்தைகள் நல்லொழுக்கமுள்ளவராக வளர்கிறார். எந்த வேலை செய்யும் முன்னரும் பெரியவர்களின் ஆலோசனையையும் ஆசிர்வாதத்தையும் பெற வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
அப்படியானவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார்கள். பிள்ளைகள் பெற்றோரின் மதித்து நடந்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். இப்படியான வீட்டில் பணத் தட்டுபாடும் இருக்காது. அத்தகைய குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |