அறிவாளியாக காட்டிக்கொள்ள இந்த 5 குணங்களை வளர்த்துக்கோங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், ஒருவரிடம் இருக்கும் சில குணங்களே அவர்களை அறிவாளியாக இந்த உலகிற்கு காட்டுகிறது. அப்படியான குணங்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
புத்திசாலிகளிடம் இருக்கும் 5 குணங்கள்
1. ஒரு மனிதன் தன்னுடைய இக்கட்டான நேரங்களில் உணர்வுகளை கட்டுபடுத்திக் கொண்டால் அவர்களே இந்த உலகில் புத்திசாலியாக பார்க்கப்படுகிறார்கள். நெருக்கடியான நேரங்களில் அவசரப்பட்டு சில முடிவுகளை எடுத்து பின்னால் அதை நினைத்து வருந்துவதில் எந்த பயனும் இல்லை என சாணக்கியர் கூறுகிறார்.
2. தவறான செயல்களை முற்றிலும் குறைத்து நல்ல செயல்களை தேடி தேடி யார் செய்கிறார்களோ அவர்களே ஞானிகள் என சாணக்கியர் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஒருவர் எப்போதும் தவறு மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பவர்கள் உண்மையில் ஒரு புத்திசாலிகளாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் அவர்களின் வேலையில் கவனம் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.
3. தன்னுடைய எதிர்கால திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர் உண்மையில் ஒரு புத்திசாலி. ஒருவரின் திட்டங்களை வெளியில் கூறும் போது அதனை தடுக்க பல வாய்ப்புகள் வரும். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது எதிர்கால திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பது நல்லது.
4. எப்பொழுதும் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் கொண்டவர்கள் அறிவாளியாக பார்க்கப்படுகிறார்கள். நேரத்தையோ, சூழ்நிலையையோ பற்றி கவலைப்படாத ஒருவர் தனது இலக்கை அடைய அதிக நேரம் எடுக்கமாட்டார்.
5. சாணக்கியரின் கூற்றுப்படி, ஆன்மீக வழியில் செல்பவர்கள் புத்திசாலிகளாகவும் சிறந்த மனிதர்களாகவும் இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கை, சிற்றின்பங்கள் இவற்றிலிருந்து எப்போதும் விலகியிருப்பார்கள். வாழ்க்கை குறித்து அதிகம் கவனம் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களை புத்திசாலி என்று அழைக்கலாம் என்கிறார் சாணக்கியர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |