chanakya: வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ சாணக்கிய நீதியில் இத தெரிஞ்சிக்கோங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், வாழ்க்கையில் வரும் மகிழ்ச்சிக்கு பின்னால் நான்கு விஷயங்கள் மறைந்திருப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.
வாழும் போதே சொர்க்கத்தை காட்டும் விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. மனித வாழ்வில் திருப்தி உணர்வுடன் இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். வெற்றி பார்க்க வேண்டும் என்றால் நிறைய விடயங்களில் திருப்தியடைய வேண்டும். தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தி அடையக்கூடியவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என சாணக்கியர் நீதியில் கூறப்படுகிறது.
2. இரக்கம் இல்லாமல் வாழும் வாழ்க்கை நன்மையளிக்காது என சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பாவம் செய்ய மாட்டார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவரின் மனதில் எப்போதும் கருணை உணர்வு இருக்க வேண்டும். பிறரிடம் எப்போதும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இது குடும்பம் மட்டுமல்லாது சமூகத்திலும் நல்ல மரியாதையை பெற்றுக் கொடுக்கும். அத்துடன் தேவையற்ற பிரச்சினைகள் வருவது குறைவாகவும் இருக்கும்.
3. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் மனம் அமைதியாக இருந்தால் அதனை சரியாக எதிர்கொள்ளலாம். மன அமைதியுடன் இருக்கும் மனிதர்களை பார்ப்பது அரிதான விடயமாகும். வாழ்க்கையில் அமைதியை விட பெரிய தவம் இல்லை என்று சாணக்கியர் கூறுகிறார். அமைதியான மனம் இருந்தால், கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக எதிர்கொள்ளலாம். இதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.
4. சாணக்கிய நீதியில் கூறப்பட்ட போன்று மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வளவு சாதனை செய்தாலும் அதனை நினைத்து திருப்தியடையமாட்டார்கள். பேராசை இருந்தால் திருப்தியடைய முடியாது என சாணக்கியர் கூறுகிறார். தற்போது பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை அழிக்கும் காரணியாக பேராசை உள்ளது. இருப்பதை வைத்து திருப்தியடைய கற்றுக் கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |