பிறப்பு முதல் இறப்பு வரை வறுமையில் வாடும் நபர்கள்- சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
Numerology: இந்த தேதியில் பிறந்தால் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காதாம்..பழிவாங்கியே தீரும் ஆட்கள் யார் தெரியுமா?
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், காலம் முழுவதும் ஏழையாகவே வாழப்போகும் நபர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. சாணக்கிய நீதி படி, எப்போதும் சண்டை சச்சரவு இருக்கும் வீடுகளில் லட்சுமி தேவியின் வரவு இருக்காது எனக் கூறப்படுகின்றது. அப்படியான ஒரு நிலை இருந்தால் பணவரவு குறைவாக இருக்கும். சண்டையில்லாமல் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கும் வீடுகளில் லட்சுமியின் வரவு அதிகமாக இருக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
2. நாம் இருக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதே போல் நாம் அணியும் ஆடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். ஏனெனின் லட்சுமி தேவி வரவிற்கு சுத்தம் அவசியம். வறுமையை ஒழிக்க இது ஒரு சரியான வழியாகும்.
3. அதிகமாக உண்பவர்கள் வீட்டில் லட்சுமி இருக்காது என சாணக்கியர் கூறுகிறார். சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்கினால் வீட்டில் லட்சுமி வரவு இருக்காது எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் வீட்டில் அதிகமான நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
4. இரவு நேரங்களில் சமையலை முடித்த பின்னர் பாத்திரங்களை கழுவிய பின்னர் படுக்கைக்கு செல்வது லட்சுமி வரவை அதிகப்படுத்தும். இதனை தவறினால் அன்னபூரணி தேவிக்கு கோபம் வரும் என சாணக்கியர் கூறுகிறார்.
5. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை துடைப்பது லட்சுமியை இல்லாமலாக்குவதற்கு சமம். பகலில் மட்டுமே வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அடுத்த நாள் காலையில் சுத்தம் செய்யலாம்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |