chanakya: வெற்றியை நிர்ணயிக்கும் பழக்கங்கள்- காலை எழுந்தவுடன் செய்தாலே ஜெயிச்சிருவாங்களாம்..
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய நீதியின் படி காலையில் எழுந்தவுடன் குறிப்பிட்ட சில விடயங்களை தொடர்ந்து செய்பவர் வாழ்க்கையின் வெற்றியாளராக மாறுகிறார் என்று கூறப்படுகிறது.
அப்படி என்னென்ன விடயங்களை காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. எப்போதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீகக் கண்ணோட்டம் மட்டுமின்றி ஆரோக்கியமாக இது சரியாக வரும். காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் கொண்டவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என சாணக்கியர் கூறுகிறார். காலை எழுந்தவுடன் இறைவனை வழிபடுவது அவசியம்.
2. காலையில் எழுந்தவுடன் குளித்த பின்னர் சூரியபகவானுக்கு நீரைச் சமர்ப்பிக்க வேண்டும். இது உங்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். சூரியனுக்கு அர்க்கியம் செய்த பின் கடவுளின் ஞாமத்தை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு இந்த சந்தனத்தை உங்கள் நெற்றியிலும் கழுத்திலும் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனின் அருளும் மன அமைதியும் உங்களுக்கு கிடைக்கும்.
3. ஒரு மனிதர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது அவரின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் செய்வதால் இது சாத்தியமாகும். உடல் சீராக இருக்க வேண்டும் என்றால் இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.
4. பணத்தைப் பாதுகாப்பான முறையில் முதலீடும் செய்யும் நபர் எப்பேர்ப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் புன்னகையுடன் இருப்பார். சரியான நேரத்தில் பணத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கஷ்ட காலங்களிலிருந்து தப்பிக் கொள்வார்கள்.
5. பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி தேவையற்ற செலவுகளைக் குறைப்பதாகும். பணத்தை பார்த்தவுடன் எங்கு செலவழிக்கலாம் என்பதனை விட்டுவிட்டு எப்படி சேமிக்கலாம் என்பதனையே யோசிக்க வேண்டும். இவர்கள் மற்றவர்கள் பார்வையில் கஞ்சர்களாக விளங்கினாலும் அவர் வாழ்க்கையில் பணக்காரர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |