வாழ்க்கையில் எல்லாமே வெற்றி ஆகனுமா? பறவைகளின் இந்த குணங்களை கத்துக்கோங்க
உலகில் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக கருதப்பட்ட சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை தனது கொள்கைகள் மூலம் விளக்கியுள்ளார்.
கடவுள் பூமிக்கு அனுப்பிய அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது சிறப்பு குணம் இருக்கும். இதனை சாணக்கியர் நமது வாழ்க்கைக்கு எவ்வாறு பாடமாக எடுத்துரைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒரு சிறு எறும்பு கூட நமக்கு அருமையான பாடம் கற்பிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்நிலையில் சில பறவைகளின் குணங்கள் நமக்கு எப்படி வெற்றியை கொடுக்கும் என்பதை சாணக்கியர் கூறியதை வைத்து தெரிந்து கொள்வோம்.
பறவைகளின் குணங்களில் வெற்றியை பெறலாம்
கொக்கின் பண்புகள் ஒரு நபரை வெற்றியடைய மிகவும் பயனுள்ளதாக இருக்குமாம். அதாவது இரையைப் பிடிப்பதற்கு தனது அனைத்து புலன்களையும் பயன்படுத்துகின்றது. புலன்களை கட்டுப்படுத்துவது மனிதர்களின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். அதாவது புலன்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களின் மனம் அமைதியற்றதாக இருப்பதுடன், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தோல் ஏற்படும்.
புத்திசாலி பறவையாக சாணக்கியர் காகத்தை வர்ணிக்கின்றார். ஏனெனில் காகம் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது போன்று மனிதர்களும் இருக்க வேண்டும். எந்தவொரு தயக்கம், பயம் இல்லாமல் முழு மன உறுதியுடன் தனது உணவிற்காக பல முயற்சிகளை மேற்கொள்ளும் காகத்திடமிருந்து மனிதர்கள் இந்த குணத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகின்றார்.
அடுத்ததாக புத்திசாலி பறவைகளில் கோழியையும் சாணக்கியர் கூறுகின்றார். ஒரு நபர் சூரிய உதயத்திற்கு முன் எழும் குணத்தினை சேவலிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கோழிகள் உணவை பகிர்ந்து கொண்டாலும், போட்டியாளர்களிடம் போட்டியிடவும் செய்கின்றது. கோழியைப் போன்று பின்வாங்காமல் தன் உரிமைக்காக வீரத்துடன் போராடும் குணத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
காட்டின் ராஜாவாக திகழும் சிங்கம் தனது பணி எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதனை எடுத்த பின்பு பின்வாங்காது. அதுபோன்று மனிதர்கள் முழு அர்ப்பணிப்புடனும், திறமையுடனும் வேலை செய்யவதை சிங்கத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
நிறைய உணவுகளை உண்ணும் ஆற்றல் பெற்ற நாய், சிறிதளவு உணவிலேயே திருப்தி அடைந்துவிடுமாம். மேலும் எச்சரிக்கை உணர்வுடன் தூங்கும். மனிதர்களும் பாதுகாவலரை நேசித்து தைரியத்தை காட்டும் இந்த குணத்தை நாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |