அத்தனை சத்துக்களையும் கொண்டிருக்கும் கொண்டக்கடலையில் ஒரே ஒரு தோசை சுட்டு சாப்பிடுங்க!
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும்.
இவை இரண்டையும் வித்தியாச வித்தியாசமான முறையில் செய்துக் கொடுத்தால் உணவில் ஒரு மாற்றம் இருக்கும் ஆரோக்கியத்திலும் ஒரு மாற்றம் இருக்கும்.
அப்படி ஏராளமான சத்துக்களைக் கொண்ட கொண்டை கடலையில் தோசை செய்து சாப்பிட்டால் இன்னும் உடலுக்கு ஆரோக்கியம் தான்.
தேவையான பொருட்கள்
- கொண்டக்கடலை – 1 கப்
- பச்சரிசி – 1/2 கப்
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- இஞ்சி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 2
- உப்பு – தேவையான அளவு
- சீரகம் – 1 /2 தேக்கரண்டி
- நெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை தண்ணீர் 8 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
பிறகு பச்சரிசியும் வெந்தயம் சேர்த்து அதனையும் 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
இவை இரண்டும் ஊறியதும் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் என்பவற்றை சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மா போல அரைந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து 12 மணிநேரம் வரை புளிக்க விடவும்.
பிறகு கொஞ்சமாக சீரகம் சேர்த்து நன்றாக கலக்கிய பின் தோசைக் கல்லில் தோசை ஊற்றிக் கொள்ளவும்.
தேவையெனின் நெய் ஊற்றி செய்துக் கொள்ளலாம்.