சக்கரை பொங்கலை கோவில் மணம் மாறாமல் செய்யணுமா? இந்த டிப்ஸ் போதும்
எல்லோருக்கும் சக்கரை பொங்கல் மிகவும் ருசியாக செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் பலருக்கும் அதற்கு என்னென்ன ஸ்பெஷலான பொருட்கள் சேர்க்க வேண்டும் என்று தெரியாது.
பொதுவாக நெய் அரிசி வெல்லம் இருந்தால் அனைவரும் பொங்கல் செய்து விடுவார்கள். ஆனால் உண்மையான விடயம் என்னவென்றால் இந்த பொருட்களை சேர்க்கும் போது அதில் ஒவ்வொரு விதமான நல்லதை சேர்த்தால் மட்டுமே பொங்கல் மெிகவும் சுவையாக இருக்கும்.
அதிலும் நாம் வீட்டில் செய்யும் பொங்கலை விட கோவிலில் செய்யும் பொங்கள் மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பெஷலான பொருள் சேர்க்கப்படுகின்றது. இந்த சக்கரை பொங்கல் டிப்ஸ் என்வெல்லாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

சக்கரை பொங்கல்
பொங்கல் செய்வது மிகவும் எளிய முறை என்றாலும் அதற்கு சில பொருட்களை சேர்க்கும் போது சுவையை கூட்டி கொடுக்கும்.
1. சக்கரை பொங்கல் செய்ய, புது பச்சரிசி அல்லது பொங்கல் பச்சரிசி என கடைகளில் கிடைக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இல்லையென்றால் பொன்னி பச்சரிசி பயன்படுத்தலாம்.
2. பொங்கல் செய்ய தரமான பழுப்பு நிற வெல்லத்தை பயன்படுத்தவும். மேலும் பொங்கல் செய்யும் பொழுது பச்சை கற்பூரம் சேர்ப்பது பொங்கலின் சுவையைக் கூட்டும்.

3. சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து பொங்கல் செய்தால் சுவையும் மணமும் கூடும். இறுதியாக முந்திரி திராட்சையை வறுத்து சேர்த்த பிறகு கால் கப் அளவு கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
4. பச்சரிசி இல்லாதவர்கள் சாதம் வடிக்கும் அரிசியிலும் இதேபோல சக்கரை பொங்கல் செய்யலாம். சக்கரை பொங்கல் செய்யும் பொழுது வெல்லம் உங்கள் தேவைக்கு ஏற்ப கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
5. சக்கரை பொங்கல் பரிமாறும் பொழுது அதன் மேலே 1 தேக்கரண்டி நெய் சேர்த்து பரிமாறினால் அலாதியான சுவையாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |