நாவூரும் சுவையில் காரசாரமான சிக்கன் மிளகு வறுவல்! இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது.அந்தளவுக்கு சிக்கன் எல்லா உணவு வகைகளுடனும் அசத்தலாக சுவையை கொடுக்கக்கூடியது.
அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவருக்கும் விரும்பும் சிக்கனை கொண்டு குளிர்காலத்துக்கு பக்காவாக பொருந்தும் வகையில் காரசாரமான சுவையில் சிக்கள் மிளகு வறுவல் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வறுத்து பொடிப்பதற்கு தேவையனவை
சோம்பு - 1 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
வறுவலுக்கு
சிக்கன் - 500 கிராம்
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/4 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் சோம்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரையில், வறுத்து இறக்கி குளிரவிட வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக பொடித்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதகையடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக கிளறிவிட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதங்கவிட வேண்டும்.

பின்னர் அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கிளறிவிட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரையில் சிக்கனை வேகவிட வேண்டும்.
அதன் பின்னர் 20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக பிரட்டி , இறுதியில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் காரசாரைமான சுவையில் சிக்கன் மிளகு வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |