மரணத்தின் பின்னரும் உங்களை துரத்தும் துரதிர்ஷ்டம்!
நம்மில் யாராலும் எதிர்காலத்தை கணிக்க முடியாது. ஆனால், ஒன்று மாத்திரம் நிச்சயம் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, நமது கர்மாக்கள் மற்றும் செயல்கள் என்பன எமது பிற்கால வாழ்க்கையில் நிச்சயம் பிரதிபலிக்கும்.
சாணக்கிய நீதியின்படி நமது வாழ்வில் நடப்பது எதுவுமே காரணமின்றி நடக்காது. அதாவது அவர் சில வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி கூறி இந்த சம்பவங்கள் நடந்தால் இறந்ததன் பின்னரும் அவர்களை துரதிர்ஷ்டம் துரத்துமாம். சரி இனி அவற்றைப் பார்ப்போம்.
image - hindi news
வெகுமதி
உங்களது உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைக்க வேண்டிய வெகுமதி வேறொருவரை சென்றடைந்தால் அது ஒரு துரதிர்ஷ்டவசமான அறிகுறியாகும்.
இது மரணத்தின் பின்னரும் துரதிர்ஷ்டம் உங்களை துரத்தும் என்பதற்கான அறிகுறி.
மனைவியின் வெகுமதி
முதுமையில் மனைவியின் துணை இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படி அந்த ஆதரவு உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், அது மரணத்தின் பின்னரும் சித்திரவதையை உங்களுக்குக் கொடுக்கும் என்று அர்த்தமாம்.
image - ahmednagarlive24.com
பிறரை நம்பியிருப்பது
ஆரோக்கியமான நபர் வாழ்வாதாரத்துக்காக இன்னொருவரை சார்ந்திருந்தால் அது அவர்களை துரதிர்ஷ்டம் சூழ்ந்திருப்பதற்கான அறிகுறியாகும்.
அதாவது நல்ல திறமைசாலி சுயமாக அனைத்தையும் செய்து முடிக்கும் நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு விடயத்துக்கும் பிறரை நாடியிருப்பது.