மரணத்தின் விளிம்பு வரைக்கும் சென்று வந்தேன்: ஷாக்கான தகவலை பகிர்ந்த விஜயசாந்தி
நடிகை விஜயசாந்தி தான் வாழ்வில் சந்தித்த பல இக்கட்டான சூழ்நிலைகள் பற்றியும் தான் பெற்ற சம்பளத்தை பற்றியும் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றிய பல விடயங்களை குறித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜயசாந்தி நடிகை
நடிகை விஜயசாந்தி கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்
அதன்பின் 'ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி, இளஞ்ஜோடிகள், மன்னன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.
நடிகை விஜயசாந்தி தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய அனைத்து மொழிகளிலும் அதிரடி, ஆக்ஷனில் இறங்கி நடித்திருப்பார்.
நடிகை விஜயசாந்தி அன்று முதல் இன்று வரை பல முன்னணி பிரபலங்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், இவருக்கு பல தேசிய விருது, திரைப்பட தேசிய விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதற்குப்பிறகு அரசியலில் நுழைந்து விட்டார்.
செத்து பிழைத்தேன்
விஜயசாந்திக்கு தனது வாழ்நாளில் பலமுறை செத்துப்பிழைத்ததாக தெரிவித்திருக்கிறார். ஒருமுறை விமான விபத்து மற்றொரு முறை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டேன்.
இன்னும் ஒரு முறை தீயில் மாட்டிக் கொண்டேன். இத்தனை அசம்பாவிதம் நடந்தாலும் நான் உயிர் பிழைத்தேன் தற்போது வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சம்பளம்
நடிகை விஜயசாந்தி சினிமாவில் வாங்கிய முதல் சம்பளம் 5 ஆயிரம் ரூபாய். ஆனால் படம் முடிந்ததும் அவரை ஏமாற்றி ரூ.3 ஆயிரம் மட்டும் தான் அவர்கள் கொடுத்தார்கள்.
3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்ககே தான் உயர்ந்தேன் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்தக் காலத்திலேயே இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் நானும் ஒருத்தியாக இருந்தேன் எனத் தெரிவித்திருக்கிறார்.