மூக்கடைப்பு, தொடர் தும்மலா? Cetirizine மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தும்மல், மூக்கடைப்பு, கண் மற்றும் மூக்கில் நீர் வடிதல், சளி, அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது Cetirizine.
எவ்வாறு செயல்படும்?
ஒவ்வாமை தொந்தரவுகளின் போது நமது உடலில் உற்பத்தி செய்யப்படும் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருளுக்கு எதிராக செயல்படுவதன் மூலம் சரிசெய்கிறது, அதாவது ஆன்டிஹிஸ்டமைனாக செயல்பட்டு ஒவ்வாமை தொற்றை குணப்படுத்துகிறது.
Cetirizine மாத்திரைகள் உங்கள் அறிகுறிகளை சரிசெய்யலாமே தவிர, முழுமையாக குணப்படுத்தாது.
உணவுடன் அல்லது உணவு இல்லாமலோ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
முறையான மருத்துவ ஆலோசனையின்படி மாலை நேரங்களில் எடுத்துக்கொள்வது சரியான தீர்வினை தரலாம்.
உங்கள் வயது மற்றும் எடைக்கு ஏற்றவாறு சரியான அளவில் மருந்துகளை உட்கொள்ளவது அவசியம்.
ஒருநாளைக்கு ஒருமுறை அல்லது மருத்துவரின் பரிந்துரைப்படி தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம்.
பக்கவிளைவுகள்
* தூக்கம்
* மயக்கம், தலைச்சுற்றல்
இது பொதுவான பக்கவிளைவே, ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம்.
இதுதவிர வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
எந்தவொரு நோய்க்கும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.
Cetirizine மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்னர் மது அருந்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இது தூக்க கலக்கத்தை மேலும் அதிகரிக்கலாம்.
கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரைப்படி Cetirizine மாத்திரைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதே.
இதேபோன்று தாய்ப்பாலூட்டும் பெண்களில் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அதிக நாட்கள் அல்லது தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
சிறுநீரக நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் Cetirizine மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும், தவிர்க்க முடியாத காரணங்களால் மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்தில் இதை பயன்படுத்தலாம்.
குறிப்பாக கல்லீரல் நோயாளிகளும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.