கழுத்து கருவளையத்தை இலகுவாக போக்க சில வழிகள்
பெரும்பாலான பெண்களுக்கு தலைவலியாக இருப்பது கழுத்தில் காணப்படும் கருவளையம் தான்.
கழுத்தில் தெரியும் கருவளையத்தை எப்படியாவது போக்குவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள்.
அழகாக இருப்பதற்கு வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. என்னதான் நாம் முகத்தை அழகுபடுத்தினாலும் ஒவ்வொரு ஆடை அணியும்போதும் நமது கழுத்து பகுதி அழகாக இருக்க வேண்டும்.
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் அழகை கெடுக்கும் விதத்தில் கழுத்து பகுதியில் கருவளையங்கள் காணப்படுகின்றன.
இந்த கருவளையங்களை அடியோடு விரட்ட உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து இந்த பதிவில் பாாக்கலாம்.
கழுத்து கருவளையம்
1.ஒரு அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறில் அரை தேக்கரண்டி ரோஸ் வாட்டார் கலந்து கொள்ள வேண்டும். அதை கழுத்தில் தடவிய பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதை தினமும் படுக்கும் முன் செய்தல் வேண்டும். இதே போல் வெள்ளரிக்காய் சாற்றையும் கழுத்தில் பூசி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவினால் கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.
2. ஆட்டுப்பாலுடன் கொஞ்சமாக கடலை மாவு சேர்த்து அதனுடன் கொஞ்சம் அப்பச்சோடா சேர்த்து கலந்து கழுத்தில் தடவி வர வேண்டும்.
இதை இரவில் உறங்கும் முன் போட்டு அடுத்த நாள் காலையில் கழுவ வேண்டும். எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் அடியோடு இல்லாமல் போய் விடும்.
3.கொஞ்சம் தயிருடன் எலமிச்சை சாறை பிளிந்து தடவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
இதுதவிர அப்பிள் வினிகரையும் பன்னீரில் கலந்து பஞ்சில் நனைத்து கருமை படிந்த இடத்தில் போட்டால் கருவளையம் நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |