திடீரென வெடித்து தீப்பிடித்த மொபைல் போன்! நொடியில் உயிர்தப்பிய நகரின் திக் திக் காட்சி
மொபைல் போன் கடையில் உரிமையாளர் மொபைல் போனை சரி செய்வதற்கு கையில் எடுத்த போது, திடீரென வெடித்து தீப்பற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திடீரென வெடித்த மொபைல் போன்
மத்தியப்பிரதேசத்தில் பாலகாட் மாவட்டத்தில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில், வாடிக்கையாளர் ஒருவர் தனது போனை சரிசெய்வதற்கு வந்துள்ளார்.
குறித்த செல்போனை வாங்கிய உரிமையாளர் அதனை பின்பக்கமாக திறக்க முயன்றபோது, திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்துள்ளது.
மொபைல் போன் வெடித்து தீப்பற்றிய போது உடனே சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் போனை வெளியே தள்ளிவிட்டுள்ளார்.
இதனால் பாரிய விபத்திலிருந்து தப்பித்த நிலையில், பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.

கடைசி உரிமையாளர் கூறியது என்ன?
செல்போன் பயன்படுத்துபவர்கள் மொபைல் வேலை செய்யவில்லை என்றாலோ, பேட்டரி திடீரென உப்பி, வீக்கமாக இருந்தால் செல்போனை திறக்க முயலாதீர்கள்.
உடனடியாக சர்வீஸ் கடைசியில் கொடுத்துவிடுங்கள். எனக்கு நேர்ந்த விபத்து உங்களுக்கும் வந்துவிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...