இரவில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இதனால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது தெரியுமா?
பொதுவாகவே இப்போதுள்ளவர் அதிகம் அதிகமாகவே செல்போனுக்குள் மூழ்கி விடுகிறார்கள். அதிலும் சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லோரும் அதற்கு அடிமையானது போல அடங்கி விடுகிறார்கள்.
இப்போதெல்லாமல் செல்போன் இல்லாமல் ஒரு சிலர் தூங்குவதில்லை. தூங்கும் போது கூட வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று சுற்றிவிட்டுத் தான் தூங்கச் செல்வார்கள்.
இவ்வாறு உறக்கம் இல்லாமல் செல்போன்பாவிப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கிறது என தெரியுமா?
பாதிப்புக்கள்
ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது.
செல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். இது உங்கள் பார்வையை மட்டுமல்ல, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கிறது.
அதாவது நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System) இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.
அதுதான் பினியல் சுரப்பி, கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின் (melatonin) இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும். இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்.அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்.
ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது.
பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும். இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.
அதனால் முடிந்தவரை இரவு நேரங்களில் செல்போன்களை பாவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது.