நீங்கள் இருவரும் காதலர்களா? ரவீனா மணி சந்திராவின் நெருக்கம்- விசித்ரா பரபரப்பு கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் ரவீனா, மணி சந்திரா இருவரையும் நீங்கள் காதலர்களா என்று விசித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் கடந்த வாரம் அனன்யா எலிமினேட் செய்யப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை பிக்பாஸிடம் பேசி அவரும் தானாக வெளியே வந்துவிட்டார். இந்த வார தலைவராக சரணனன் இருந்து வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்பு ஜோவிகா படிப்பு விடயமாக விசித்ரா கேள்வி எழுப்பி கடும் சர்ச்சையில் மூழ்கினார்.
ரவீனா மணி சந்திரா
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் ரவீனா மணி சந்திரா ஏற்கனவே நெருக்கமாக எடுத்திருந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது.
இவர்கள் இருவரும் காதலர்கள் என்று வெளியே ரசிகர்களும் கூறி வந்த நிலையில், விசித்ரா இந்த கேள்வியை அவர்களிடையே நேரடியாக கேட்டுள்ளார்.
ரவீனா உள்ளே வந்ததும் மனி சந்திராவைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நீயுமா இந்த போட்டியில் என்று கேட்டார்... பின்பு முதல் நாள் வேக்கப் பாடலில் மணி சந்திரா நடனமாடிய போது ரவீனா திடீரென அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தார்.
இவர்களின் நெருக்கம் தற்போது விசித்ராவை கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இந்நிலையில் இருவரும் அமர்ந்திருக்கும் போது நீங்கள் இரண்டு பேரும் லவ்வரா என்று விசித்ரா ஓப்பன் ஆகவே கேட்டுள்ளார்.
ரவீனா இல்லை நாங்கள் நண்பர்கள் என்று மழுப்பலாக பதிலளித்த நிலையில், உங்களது நெருக்கம் காதலர்கள் போன்று தெரிவதாக மீண்டும் விசித்ரா கேட்டுள்ளார்.
இதற்கு இருவருமே இல்லை நாங்கள் நண்பர்கள் தான் கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |