கணவனிடம் இருந்து விடுதலைப் பெற்ற மனைவி: 4ஆண்டு விவாகரத்து கொண்டாட்டம்!
4ஆவது விவாகரத்து நாளை கொண்டாடிய பெண்ணின் பதிவு தங்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
விவாகரத்து
பொதுவாக தற்போதைய தம்பதிகளுக்கு விவாகரத்து என்பது சாதாரண விடயமாகி விட்டது. கணவன்-மனைவி பந்தத்தை முறித்துக்கொள்ள இன்னும் சிலர் நீதிமன்ற வாசலில் தவம் கிடக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது.

மேலும், வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்களை விட இரு மண புரிதலுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே இன்று அதிகம் விவாகரத்து செய்கின்றனர்.
கணவனிடம் பிடிக்காத குணங்களாலும், மனக்கசப்பான விடயங்களாலும் சில ஏனைய காரணங்களாலும் சில தம்பதிகள் விவாகரத்தை விரும்பி பிரிந்து செல்கின்றனர்.
விவாகரத்தை கொண்டாடிய பெண்

இவ்வாறு இருக்கையில் விவாகரத்துப் பெண் ஒருவர் அந்த நாளை ஞாபகம் வைத்துக் கொண்டு அந்த நாளை கொண்டாடிவருகிறார்.
பெங்களூரைச் சேர்ந்த சாஸ்வதி சிவா என்ற பெண்ணே இவ்வாறு விவாகரத்து நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக விவாகரத்து ஆகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அவருக்கு நான்கு ஆண்டுகள் விவாகரத்து ஆனதை கொண்டாடியு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், விவாகரத்தான பின் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், தனக்கு விவாகரத்து கிடைத்த நாளை கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு சுதந்திரம் கிடைத்த நாள் என்றும் கருதி கொண்டாடி வருகிறார்.
விவாகரத்தான நாளை சுதந்திர நாளாக கொண்டாடி வரும் பெண் குறித்த பதிவு தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது.
4 years of freedom, and not taking it for granted for a single day. Celebrating a divorce-versary today. ?
— Shasvathi Siva (@shasvathi) January 23, 2023
Happy happies to me!!! pic.twitter.com/fxcp5MFScb