சூறையாடிய திருநங்கைகள்…. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் கூத்தாண்டவர் திருவிழா இரண்டு வருடங்களுக்கு பிறகு நாளை நடைபெறுகிறது.
திருவிழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சார்ந்த திருநங்கைகள் விழுப்புரத்தில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள குபேர் பிளாசாவில் இயங்கி வரும் உணவகத்தில் உணவருந்துள்ளனர்.
தன்னை தாக்கியவரை அடுத்த நொடியே பலி வாங்கிய டொல்பின்….. அலண்டு ஓடிய பயிற்சியாளர்!
அப்போது மது போதையில் இருந்த திருநங்கைகள் உணவருந்தி விட்டு உணவகத்தில் உணவு பரிமாறும் ஊழியர்கள் இருந்தபோதும் உணவினை தானாக எடுத்துவந்து உணவுகளை பறிமாறியதால் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நாங்கள் இருக்கும் போது ஏன் நீங்களே உணவு பரிமாறி கொள்கிறீர்கள் என கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து திருநங்கைகள் இலவசமாக நாங்கள் சாப்பிட வரவில்லை என கூறி மதுபோதையில் உணவு உண்ட பின் கடையில் இருந்த கண்ணாடிகளை உடைத்து கற்களாலும், தடியாலும் உணவகத்தினஒ தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து உணவகம் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டதையடுத்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
மது போதையில் திருநங்கைகள் உணவகத்தினை தாக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆபாசமாக நடந்து கொள்ளும் காட்சிகளை கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.