மாலைநேர சிற்றுண்டிக்கு அருமையான காலிஃப்ளவர் வடை....
மாலை நேரங்களில் டீ, கோப்பியுடன் ஏதாவது சாப்பிட இருந்தால் நன்றாக இருக்குமே..என்று யோசிக்கும்போது, சட்டென்று நம் நினைவுக்கு வருவது வடை தான்.
சாதாரணமாக செய்யும் வடை போலல்லாமல் அதில் வித்தியாசமாக ஏதாவதொன்றை சேர்த்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்.
இந்தக் குறிப்பில் காலிஃப்ளவர் வடை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - Tori Avey
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
கடலைப் பருப்பு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
image - Jeyashri's Kitchen
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும்.
பின்னர் கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
ஊறவைத்ததை சோம்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, அதில் காலிஃப்ளவரை போட்டு ஒரு கொதி வந்ததும் நன்றாக வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தில் காலிஃப்ளவர், கசகசா, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு என்பவற்றை தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைய வேண்டும்.
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி செய்துவைத்த மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடைபோல் தட்டி பொரித்தெடுக்கவும்.
மொறுமொறுப்பான காலிஃப்ளவர் வடை ரெடி.
image - BetterButter