வீட்டிற்கு அடிக்கடி பூனை வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? சகுனம் கூறும் உண்மை
வீட்டில் நாம் வளர்க்காமலே அடிக்கடி பூனைகள் வந்தால் அதற்கு எதிர்கால சகுனம் இருப்பதாக ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.
வீட்டிற்கு பூனை வரும் சகுனம்
சில நேரங்களில் வீட்டிற்குள் பூனை வருவது வழக்கமானது. ஆனால் அதற்கான ஆன்மீக அர்த்தம் என்னவென்று நீங்கள் யோசித்ததுண்டா?
ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, பூனைகள் மர்ம சக்தி கொண்ட உயிரினங்களாக கருதப்படுகின்றன. ஒரு பூனை வீட்டிற்கு அடிக்கடி வந்தால், அது சில முக்கிய அறிகுறிகளை நமக்கு கூற முற்படுகின்றன என அர்த்தமாகுமாம்.
பூனை வருவது நல்லதா?
பூனைகள் எதிர்மறை சக்திகள் இருக்கும் இடங்களில் போகாது. எனவே உங்கள் வீட்டிற்கு பூனை வருவது நேர்மறை ஆற்றல் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும்.
இது தவிர வீட்டில் பூனை திடீரென வந்து பூனை குட்டி போடுவது மிகவும் சிறந்த சகுனம். இது வீட்டில் குழந்தை பாக்கியம் வரப்போகிறது என்பதைக் குறிக்கும்.
பூனை சந்திரனுடன் தொடர்புடையது என்பதால், மனநிலை மாற்றம், அதிர்ஷ்டம் போன்றவற்றையும் குறிக்கலாம்.
கருப்பு பூனை வருதல் - சில நம்பிக்கைகளின்படி, கருப்பு பூனை வீட்டிற்கு வருவது செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் என கருதப்படுகிறது. எனவே கருப்பு பூனையை பிடிக்காவிட்டாலும் அடித்து விரட்ட வேண்டாம். பூனைகளை ஒருபோதும் துரத்தக் கூடாது.
அவற்றுக்கு அன்பாக உணவளிப்பது நல்ல கர்மாவை ஈர்க்கும். ஒரு வீட்டில் பூனை அடிக்கடி வருகிறது என்றால் அங்கே நல்ல சக்தி இருக்கிறது என அர்த்தம்.
காரணம் வீடு சுத்தமாகவும், நேர்மறை ஆற்றல்களுடன் இருக்குமானால், பூனைகள் அதனை விரும்பும்.
ஆன்மீகப்படி பூனையின் வருகை இயற்கை தரும் ஒரு சின்னம் என கருதப்படுகிறது. இதை நல்ல அடையாளமாகக் கருதி, நேர்மறை மனநிலையுடன் வாழ்வது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
