இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கோடிக்கணக்கான பணத்தை கண்டெடுத்த போராட்டக்காரர்கள் - வைரல் வீடியோ!
இலங்கையில் அதிபர் கோத்தாபய ராஜபக்சே வீட்டில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள சுரங்க பாதையில் கட்டுக்கட்டாக பணத்தை கண்டெடுத்துள்ள வீடியோ காட்சியானது வைரலாகி வருகிறது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்கள் எரிப்பொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷே பதவியை விட்டு தப்பி ஓடினார்.
பின்னர் ரணில் விக்ரமசிங்கெ பிரதமராக பதவியேற்று நிலமையை சரிசெய்ய முயன்றார்.

ஆனாலும், நிலைமை கட்டுக்குள் வராததால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அதிபர் கோத்தாபய ராஜபக்ஷே வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.
இந்நிலையில், கோத்தாபய வீட்டில் போராட்டக்காரர்கள் சுற்றி வரும் நிலையில் அங்கு ஒரு பதுங்குக்குழி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு சோதனை செய்கையில், கட்டுக்கட்டாக உள்நாட்டு, வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட அதில் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டெடுப்பு.#SriLanka | #SriLankaCrisis | #SriLankaProtests pic.twitter.com/TvyNeuPMVs
— RJ RaJa (@rajaduraikannan) July 10, 2022