நாக்கில் எச்சில் ஊறும் சுவையான கேரட் அல்வா - செய்வது எப்படி?
கேரட் -
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடும்போதும் சுவையாக இருக்கும். கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.
இவை ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கொடுக்கிறது.
கேரட் சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவி செய்கிறது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.

சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் -
தேவையானவை:
கேரட் - அரை கிலோ
பால் - கால் லிட்டர்
நெய் - 25 கிராம்
முந்திரி - 15 முதல் 20
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை நீர் ஊற்றாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை மேல் தோல் சீவி துருவிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அடிகனமாக பாத்திரத்தை வைத்து துருவிய கேரட்டை மட்டும் சேர்த்து நீர்பதம் வற்ற வதக்க வேண்டும்
. பிறகு, அதில் பால் மற்றும் சீனி சேர்த்து சுருளும் வரை கிளறிக்கொண்டு இருக்க வேண்டும். வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி முந்திரி, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பால் வற்றியதும் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து நெய் பிரியும் வரை கிளற வேண்டும். நெய் பிரிந்து வந்ததும் சுவையான கேரட் அல்வா தயாராகி விடும். ர்.