பூச்சி கொசுக்களை சாப்பிடும் அரிய வகை தாவரம் மேற்கு இமயமலையில் கண்டுபிடிப்பு!
மேற்கு இமயமலைப் பகுதியில் அரிய வகை தாவரத்தை கண்டுபிடித்துள்ளனர். மேற்கு இமயமலைப் பகுதியில் 'யூட்ரிகுலேரியா பர்செல்லாட்டா' என்ற தாவர இனம் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அரிய வகை தாவரமானது வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 20 தாவர இனங்கள் உடையதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்துள்ளனர்.
இவை உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் மேற்கு இமயமலைப் பகுதி முழுவதுமே இந்த அரியவகை செடியை பார்ப்பது இதுவே முதல்முறை ஆகும்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தின் மண்டல் பள்ளத்தாக்கில் தாவரத்தை கண்டுபிடித்தனர். இந்த தாவரத்தில் மேம்பட்ட சில கட்டமைப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன.
இதன் மூலம், கொசுக்கள், சிறிய தவளைகள் மற்றும் பூச்சிகளைப் பிடித்து உணவாக்கி கொள்வதற்காக, வளர்ந்த கட்டமைப்புகளில் ஒன்றை இந்த செடி வகை பயன்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Uttarakhand | In significant finding, research wing of Uttarakhand Forest department discovered rare carnivorous plant Utricularia Furcellata, in Mandal valley of Chamoli. This is 1st such recording in entire western Himalayan region said Chief Conservator of Forest (Research) pic.twitter.com/ewX4zPRgGP
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 26, 2022