ஆண்கள் தினமும் 30 நிமிடம் கார்டியோ செய்தால் இவ்வளவு பலன்களா?
தற்போது அதிகப்படியான வேலைப்பளு காரணமாக உடற்பயிற்சிகள் செய்வதை மறந்து விட்டார்கள்.
இதனால் நாளுக்கு நாள் புதிய நோய்களின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அத்துடன் உடல் நாளடைவில் வலுவிழக்க ஆரம்பிக்கும். மாறாக தினமும் உடற்பயிற்சி செய்து வருபவருக்கு உடல் கட்டுகோப்பாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அதுவும் குறிப்பாக, தினமும் ஒரு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து வருபவருக்கு போதுமான ஓய்வு கிடைக்கும் என மருத்துவர்களும் கூறுகின்றனர். வழக்கமாக நாம் செய்யும் உடற்பயிற்சிகளில் பல வகை உள்ளன. அதில் ஒன்று தான் கார்டியோ பயிற்சிகள்.
இந்த கார்டியோ பயிற்சிகளானது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும், இந்த பயிற்சிகளை மிதமான அளவில் செய்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும்.
இந்த பயிற்சியை பெண்களை விட ஆண்கள் மேற்கொள்ளும் போது, உடலளவிலும், மனதளவிலும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
அந்த வகையில், ஆண்கள் ஏன் தினமும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கார்டியோ பயிற்சி பலன்கள்
1. கார்டியோ பயிற்சிகள் தொடர்ந்து செய்து ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை இருக்காது. மாறாக அவர்களின் தசைகளை சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.
2. நீண்ட நேரம் எவ்வளவு கடினமான வேலைகளையும் திறம்பட செய்ய முடியும். எனவே ஆண்களின் தசை சகிப்புத்தன்மையை அதிகரிக்க நினைத்தால், கார்டியோ பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம்.
3. கார்டியோ பயிற்சியானது, ஒருவரது மனநிலையை மேம்படுத்தும் பயிற்சியாக பார்க்கப்படுகிறது. மன அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் கார்டியோ செய்யலாம். அத்துடன் நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
4. நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க செய்யும் கார்டியோ பயிற்சியானது சோர்வுடன் வேலைச் செய்பவர்கள் செய்யலாம். உடலானது ஃபிட்டாக இருக்கும் போது, உடலில் ஆற்றல் அளவுகள் அதிகரிக்கும். நாள் முழுவதும் வேலைச் செய்யும் ஒருவருக்கு இந்த பயிற்சி ஓய்வையை கொடுக்கும்.
5. உடலில் கலோரிகளை எரிக்க உதவும் இந்த பயிற்சியானது கொழுப்புக்களை எரித்து விடும். அத்துடன் உடலின் மெட்டபாலிசம் சீராக இயங்கச் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
