உங்களது கார் வெள்ளத்தில் சிக்கிவிட்டதா? Insurance பெறுவது எப்படி?
மிக்ஜாம் புயல் சென்னை உட்பட 4 மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது, மழை நின்றாலும் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்திருக்கிறது, இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலரும் தங்களது உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
கார், இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள்கூட வெளியாகி பலரையும் பேரதிர்ச்சிக்குள்ளாகிவிட்டது.
இந்த பதிவில் வெள்ளத்தில் சிக்கிய காருக்கு காப்பீட்டு தொகை பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
* வெள்ளத்தில் சிக்கிய காரை முதலில் மீட்டெடுத்த பின்னர் அருகில் உள்ள மெக்கானிக் அல்லது Service Centreக்கு எடுத்து செல்லவும்.
* அங்கு கார் எவ்வளவு சேதமடைந்துள்ளதை என்பதை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவும்.
* அவர்களிடம் FIR Copy வாங்கி வைத்துக் கொள்ளவும். மேலும் Service Centreல் சேதமடைந்த காரை சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்ற பட்டியலையும் வாங்கிக் கொண்டு Insurance நிறுவனத்திற்கு அனுப்பவும்.
* நிறுவனத்தில் இருந்து வரும் நபர்கள், காரை ஆய்வு செய்த பின்னர் உங்களுக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.
* அந்த தொகை உங்களுக்கு போதவில்லை என்றால் மறுபடியும் Claim செய்யலாம்.
ஆனால் மறந்தும்கூட காரை உடனடியாக Start செய்ய வேண்டும், Start செய்ததும் Engine எதுவும் பழுதானால் காப்பீட்டு தொகை வழங்குவதில் சிக்கல்கள் வரும்.