வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்
காய்கறிகள் ஒன்றாகவும், அதிக அளவு சத்துள்ளதாகவும் காணப்படுவது தான் குடமிளகாய். இதில் விட்டமின் சி மற்றும் ஏ, ஈ, பி6 சத்துக்களும் காணப்படுகின்றது.
குடைமிளகாயை செம்பு பாத்திரத்திலோ அல்லது அதிகமாக தண்ணீர்விட்டோ சமைக்கக்கூடாது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு குடமிளகாய் நல்ல ஒரு தீர்வைக் கொடுப்பதுடன், வயது முதிர்வையும் தடுக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் தோல் வறட்சி, வயிறு சார்ந்த பிரச்சினை ன அனைத்திற்கும் தீர்வு கொடுப்பதுடன் கண் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு அளிக்கின்றது.
இவ்வாறு பல சத்துக்களை அளிக்கும் குடமிளகாயில் புலாவ் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1/2 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1/4 இன்ச்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 3 பற்கள், மிளகு - 1/2 டீஸ்பூன், முந்திரி - 5 இவை மூன்றும் அரைப்பதற்கு
செய்முறை
நாம் புலாவ் சமைப்பதற்கு வைத்திருக்கும் பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
பின்பு சமைப்பதற்கு பாத்திரத்தினை அடுப்பில் வைத்துவிட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்த பின்பு அதில் அரிசி மற்றும் உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.
அரிசி வெந்ததும் அதனை இறக்கி அதிலிருக்கும் நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்துவிட்டு, எண்ணெய் நெய் இவற்றினை ஊற்றி காய்ந்ததும், அதில் சிறிது சீரகம் சேர்த்து தாளித்த பின்பு அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
மேலும் வதக்கிய கலவையுடன் குடமிளகாய் சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்கி பின்பு அதனுடன் கரம்மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறிய பின்பு வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் பிரட்டி இறக்கினால் சுவையான குடமிளகாய் புலாவ் ரெடி.